பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
16:14
சச்சின் டெண்டுல்கரை விளம்பர தூதராக நியமிக்க பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. இதற்காக, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. பிஎம்டபிள்யூ கடந்த இரு மாதங்கள் நிலவரப்படி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஆடி நிறுவனத்தால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தனது கார்களை பிரபலப்படுத்த பிஎம்டபிள்யூ இதுவரை விளம்பர தூதராக யாரையும் நியமித்ததில்லை. இந்த நிலையில், முதன்முறையாக தனது கார்களை பிரபலபடுத்துவதற்காக சச்சின் டெண்டுல்கரை விளம்பர தூதராக நியமிக்கிறது பி்எம்டபிள்யூ. வருகிற 27ம் தேதி 3 சீரிஸ் செடான் காரை பிஎம்டபிள்யூ இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அன்றைய தினமே சச்சின் டெண்டுல்கரை பிஎம்டபிள்யூ விளம்பர தூதராக அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. இதற்காக, விரைவில் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|