பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
23:28
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டு மடங்கு உயர்ந்து, 1,331 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, (627 கோடி ரூபாய்) 112 சதவீதம் அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 5,496 கோடியிலிருந்து, 6,250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் துறைகளின் வர்த்தகம், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன.இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சோப்பு மற்றும் டிடர்ஜென்டு விற்பனை, 24 சதவீதம் உயர்ந்து, 3,163 கோடி ரூபாயாகவும், அழகு சாதன பொருட்கள் விற்பனை, 17 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,847 கோடி ரூபாயாகவும், குளிர்பானங்கள் விற்பனை, 7 சதவீதம் உயர்ந்து, 654 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|