தங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.248 உயர்வுதங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.248 உயர்வு ... தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்வு தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆல்டோவை முந்தியதா இயான் கார்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
15:25

இந்தியாவில் சிறிய ரக கார்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. அத்துடன் நல்ல மைலேஜ் அளிப்பதாக இருந்தால், விற்பனை எகிறும். அந்த வகையில், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார் தான் தற்போது சக்கை போடு போடுகிறது. பொதுவாக இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர், புதிதாக கார் வாங்கும் போது சிறிய ரக கார்களை தான் வாங்குவர். இது என்ட்ரி லெவல் கார் பிரிவு என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரிவில் பல ஆண்டுகளாக ஆல்டோ காரை அடித்து கொள்ள ஆளில்லை.
இந்த சூழ்நிலையில் தான், கடந்த ஆண்டு அக்டோபரில், ஹுண்டாய் கார் நிறுவனம், "இயான்' என்ற சிறிய ரக காரை அறிமுகப்படுத்தியது. முதல் இரண்டு வாரங்களிலேயே 6,000 கார்கள் விற்பனையானது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நேரத்தில், மாதத்துக்கு 30,000 கார்களுக்கு மேல் விற்பனையாகி இருந்த ஆல்டோ காரின் எண்ணிக்கை, மாதத்துக்கு, 20,000 கார்கள் என்ற அளவுக்கு சுருங்கி போனது. ஆல்டோ கார் விற்பனையில் இந்த அளவுக்கு குறைந்து போனது அப்போது தான். எனவே, ஆல்டோ காரை, இயான் கார் முந்திவிடும் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, இந்த நிலை மாறி விட்டது. குறிப்பாக, ஃபிப்ரவரி மாதம் 7,000 இயான் கார்கள் மட்டுமே விற்பனையாகின. மார்ச் மாதம், 12,500 இயான் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகு, இதன் விற்பனை, 10,000 கார்களை தாண்டவில்லை. வழக்கம் போல, ஆல்டோ கார் தான் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
ஆல்டோ கார் தற்போது எட்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.3.39 லட்சம் வரை( எக்ஸ் ஷோரூம், டில்லி) என்ற அளவில் உள்ளது. ஆனால், இயான் காரின் பேஸிக் வேரியன்ட் காரின் விலையே ரூ.2.7 லட்சத்தை தொட்டு விட்டது. பவர் ஸ்டியரிங், "ஏஸி' வசதி போன்ற அம்சங்கள் வேண்டும் என்றால், காரின் விலை ரூ.3.11 லட்சத்தை தாண்டும். இந்த விலை தான் தான் இயான் கார் விற்பனைக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. மேலும் பெட்ரோல் விலை உயர்வு, புதிதாக கார் வாங்க நினைப்பவர்களை தயக்கமடைய வைத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தான், அனைத்து அம்சங்களுடன் கூடிய, இயான் காரின் புது வேரியன்டை, ஹுண்டாய் நிறுவனம், ரூ.3 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இருந்தாலும் இது எடுபடவில்லை. வரும் காலத்தில், இயான் கார் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)