பதிவு செய்த நாள்
26 ஜூலை2012
15:47
இந்தியாவில் குடும்பத்துடன் செல்வதற்கும், கூடுதல் எண்ணிக்கையில் பயணிக்கவும் எஸ்.யு.வி., கார்கள் தான் சரியான வாகனம். எனவே தான், எஸ்.யு.வி., கார் விற்பனை பல ஆண்டுகளாக சூடுபிடித்து வருகிறது. ரெனால்டு நிறுவனம் இதை கருத்தில் கொண்டு, ஒரு வாரத்துக்கு முன், "டஸ்டர்' என்ற எஸ்.யு.வி., காரை அறிமுகப்படுத்தியது. அதற்குள், 6,000 பேர் இதற்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்த கார், ஐந்து இருக்கைகள் மட்டுமே கொண்டது. எனினும் டீலர் முயற்சியால், கூடுதலாக இரண்டு இருக்கைகள், காரின் பின்பக்கத்தில் பொருத்தி தரப்படுகிறது. இதன் காரணமாக, லக்கேஜ் பகுதி சுருகி விடும். இருந்தாலும், கூடுதல் இரண்டு இருக்கைகள் என்பது, "டஸ்டர்' காருக்கு பெரும் வரவேற்பை அளித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கிறது. பெட்ரோல் காரின் விலை ரூ.7.19 லட்சத்தில் துவங்குகிறது. டீஸல் கார், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. டீஸலில் இயங்கும் டஸ்டர் காரின் டாப் என்ட் மாடலின் விலை, மஹிந்திராவின் எக்ஸ்யுவி 500 காரை விட, ரூ.50,000 குறைவு என்று ரெனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|