பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
12:57

ராமநாதபுரம்:அடுத்தாண்டு முதல் உப்பு உற்பத்தியை, 4 லட்சம் டன் ஆக உயர்த்தவும், மற்றும் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்களுக்காக, தனி உப்பு உற்பத்தி செய்யவும் அரசு உப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம், 5,500 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. தற்போது 3,500 ஏக்கரில் ஆண்டுக்கு 1.60 லட்சம் டன் வரை, உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தி அதிகரிக்க திட்டம்: உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, மீதமுள்ள நிலத்தை மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன திட்ட மேலாளர் (பொறுப்பு) பி.செல்வராஜ் கூறியதாவது: உற்பத்தியை பெருக்கும் வகையில் 12 கோடி ரூபாயில் 4 லட்சம் டன் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறோம். மேலும், மருத்துவ குணமுள்ள சோடியம் குளோரைடு கலந்த உப்பும், ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்களுக்கும் விரைவில் உப்பு தயாரிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|