பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
05:17

தூத்துக்குடி:ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கடலோரப் பகுதிகளில், கருவாடு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. மே மாதம் துவங்கி, ஜூலை வரை தான் கருவாடு வரத்து இருக்கும்.மீனவர்கள் பிடிக்கும் மீன்களை தரம்வாரியாக பிரித்து, 40 சதவீதம் வரை கருவாடு உற்பத்திக்காக தேக்கி வைக்கின்றனர். மீதமுள்ள மீன்களை மாநிலம் முழுவதும் உள்ள மீன் சந்தைகளுக்கு அனுப்புகின்றனர்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலில், மீன்களுக்கு உள்ளே உப்பு வைத்து, கடற்கரையோரம் கொட்டி, காய வைக்கின்றனர். இரண்டு வாரங்களில் கருவாடு தயாராகின்றன. மே மாத துவக்கத்தில், கருவாடு வரத்து கணிசமாக இருந்ததால், இதன் விலையும் சற்று மந்தமாகவேஇருந்தது.ஆடி மாதம், கடலில் காற்று பலமாக வீசுவதாலும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததாலும், கருவாடு உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது. சந்தைக்கும் கருவாடு வரத்து கணிசமாக குறைந்து விட்டது. இந்த நிலையிலும், கருவாடு பிரியர்கள், இவற்றை அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், கருவாடு விலை கிலோவுக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அடுத்த பத்து நாட்களில், கருவாடு வரத்து குறையும் என்பதால், இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, கருவாடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருவாடு வியாபாரி சம்பத் கூறியதாவது:தூத்துக்குடி, மங்களூர், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோரப் மாவட்டங்களில் அதிகளவில் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. நெத்திலி, கொள்ளி, ராட்டு, சென்னா குச்சி, நெய்மீன், பால்சுறா, வாளை உள்ளிட்ட வகையான கருவாடுகள் அதிகம் விற்பனையாகும்.
இவற்றில், அதிக சுவை கொண்ட கொள்ளி கருவாடு, பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பெருமாபேட்டை, நாகூர் பகுதிகளில் இருந்து வருகிறது. தற்போது, கருவாடு வரத்து குறைவாக இருப்பதால், இதன் விலை உயர்ந்துவருகிறது. இதுவரை, கருவாடு கிலோவுக்கு, 50 ரூபாயும், மூட்டைக்கு, 500 ரூபாயும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|