பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:48

மும்பை: சர்வதேச அளவில் சுவைமிக்க உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம்பிடித்துள்ளது.ஹோட்டல்ஸ் டாட் காம் நிறுவனம், 27,000 சுற்றுலா பயணிகளிடம், சுவையான உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த அறிக்கையின் விவரம்:சர்வதேச சுற்றுலா பயணிகளின் விருப்பமான தேர்வாக இத்தாலி (32 சதவீதம்), பிரான்ஸ் (24 சதவீதம்) உணவு வகைகள் உள்ளன. இந்த வரிசையில் ஸ்பெயின் (11 சதவீதம்), அமெரிக்கா (10 சதவீதம்) ஆகியவையும், ஆசியாவில் ஜப்பான் (18 சதவீதம்), சீனா (13 சதவீதம்), தாய்லாந்து (8சதவீதம்), இந்தியா (5 சதவீதம்), தைவான் (5சதவீதம்) உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.இந்திய சுற்றுலாபயணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய உணவு வகைகள் தான் உலகில் மிகச் சிறந்தவை என, 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அடுத்த இடங்களில் அமெரிக்கா (31 சதவீதம்), சீனா (17 சதவீதம்) ஆகியவை உள்ளன.சிறந்த உள்நாட்டு உணவு வகைகள் கிடைக்கும் நகரமாக டெல்லி தேர்வாகியுள்ளது. இதை அடுத்து, மும்பை, கோல்கட்டா நகரங்கள் இடம் பெற்றுள்ளன.குடும்பத்துடன் உணவு உண்ண சிறந்த நகரங்களாக லண்டன், நியூயார்க் மற்றும் பாரிஸ் ஆகியவை தேர்வாகியுள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|