பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:35
மெட்ராஸ் சிமென்ட்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 123 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட (98 கோடி ரூபாய்), 25 சதவீதம் அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 768 கோடி ரூபாயிலிருந்து, 995 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், செயல்பாட்டு செலவினம், 26 சதவீதம் வளர்ச்சி கண்டு, 250 கோடி ரூபாயிலிருந்து, 314 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை 20 சதவீதம் உயர்ந்து, 17.79 லட்சம் டன்னிலிருந்து, 21.58 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலைகள் வாயிலான வருவாய், 32 கோடி ரூபாயிலிருந்து, 41 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், மின்சார உற்பத்தியும், 943 லட்சம் யூனிட்டிலிருந்து, 1,144 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|