முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கொள்கைகளில் சீர்திருத்தம்: சிதம்பரம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கொள்கைகளில் சீர்திருத்தம்: சிதம்பரம் ... நடப்பாண்டில் உலகளவில் இதுவரை...அன்னிய நிறுவன முதலீடுகளில் இந்தியா முதலிடம் நடப்பாண்டில் உலகளவில் இதுவரை...அன்னிய நிறுவன முதலீடுகளில் இந்தியா ... ...
"செயில்' நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 4 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
23:43

புதுடில்லி: சென்ற ஜூலை மாதத்தில், "செயில்' நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி, 11.30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், வெப்ப உருட்டு உருக்கு உற்பத்தி, 6 சதவீதம் அதிகரித்து, 12 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், விற்பனைக்கான உருக்கு பொருட்கள் உற்பத்தி, 3 சதவீதம் உயர்ந்து, 10.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 696 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட (838 கோடி ரூபாய்) 17 சதவீதம் குறைவாகும்.இந்நிறுவனத்தின் விற்பனையும், இதே காலாண்டுகளில், 10,811 கோடியிலிருந்து, 10,640 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் இதர வருவாய் 40 சதவீதம் சரிவடைந்து, 466 கோடியிலிருந்து, 278 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.அன்னியச் செலாவணி மதிப்பில் ஏற்பட்ட மாறுபாடு மற்றும் இதர வருவாய் சரிவடைந்தது போன்ற காரணங்களால், நிகர லாபம் வீழ்ச்சி கண்டுள்ளது என, இந்நிறுவனத்தின் தலைவர் சி.எஸ்.வர்மா தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)