பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:44

- பிசினஸ் ஸ்டாண்ர்ட் உடன் இணைந்து -சீரற்ற கொள்கைகள், மந்தமான பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுக்கு இடையிலும், இந்தியாவில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில், அதிக அளவில், சர்வதேச நாடுகளில் இருந்து பங்கு முதலீடுகளை ஈர்த்ததில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.புளூம்பர்க்இது குறித்து, புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:இந்திய பொருளாதாரம், தற்போது மந்தநிலையில் உள்ள போதிலும், வரும் ஆண்டுகளில் அது சிறப்பாக வளர்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, அன்னிய நிதி நிறுவனங்கள், துணிந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன.குறிப்பாக, நீண்ட கால அடிப்படையில், நாட்டின் பொருளாதாரம் சீரிய வளர்ச்சி காணும் என்ற எதிர்பார்ப்பில், இவ்வகை அன்னிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நடப்பு ஆண்டில், ஆகஸ்ட் 2ம் தேதி வரையிலான காலத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில், 1,068 கோடி டாலர் அளவிற்கு நிகர அளவில், நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு மேற்கொண்டுள்ளன. இந்தியாஅமெரிக்க டாலருக்கு எதி ரான ரூபாய் மதிப்பு 55.70 என்ற அடிப்படையில், இந்த முதலீடுகளின் மதிப்பு 59,559 கோடி ரூபாயாக உள்ளது.இந்த வகையில், நடப்பாண்டில், மதிப்பீட்டு காலம் வரை, இந்தியாவில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடுகள், இதர 10 ஆசிய நாடுகளை விட பெருமளவு அதிகரித்துள்ளது. இதன் மூலம் இவ்வகை முதலீடுகளை பொறுத்தவரை, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.தென்கொரியாநடப்பாண்டில், ஆகஸ்ட் 3ம் தேதி நிலவரப்படி, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்ததில், தென் கொரியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில்,605.55 கோடி டாலர் (33,766 கோடி ரூபாய்) அளவிற்கு அன்னிய நிதி நிறுவனங்கள் பங்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்ததில், ஜப்பான் நாடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டு பங்குச் சந்தைகளில் குவிந்த அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, 440 கோடி டாலராக (24,585 கோடி ரூபாய்) ஆக உள்ளது.ஆசியாவில், சென்ற 3ம் தேதி நிலவரப்படி, அதிக அளவில் அன்னிய பங்கு முதலீடுகளை ஈர்த்ததில், பிலிப்பைன்ஸ் (220 கோடி டாலர்) நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய ரூபாய் அடிப்படையில், இந்த முதலீட்டின் மதிப்பு 12,258 கோடி ரூபாயாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், தாய்லாந்து நாட்டின் பங்குச் சந்தைகள், 209 கோடி டாலர் (11,644 கோடி ரூபாய்) அளவிற்கு அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்துள்ளன. இந்தோனேஷியா இதே காலத்தில், இந்தோனேஷிய பங்குச் சந்தைகளில், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 70.39 கோடி டாலர் (3,925 கோடி ரூபாய்) அளவிற்கு பங்குகளை வாங்கியுள்ளன.அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில், இலங்கை, ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டு பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் 20.19 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இது, இந்திய ரூபாய் மதிப்பில் 1,126 கோடியாக உள்ளது.பாகிஸ்தான்அதே சமயம், மதிப்பீட்டு காலத்தில், முக்கிய மூன்று ஆசிய நாடுகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது. இந்நாடுகளின் பங்குச் சந்தைகளில், குறிப்பிடத்தக்க தொகையை, அன்னிய நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன.இதன்படி, தைவான் பங்குச் சந்தைகளில் இருந்து 237 கோடி டாலர் (13,249 கோடி ரூபாய்) அளவிலான முதலீடுகளை, அன்னிய நிதி நிறுவனங்கள் திரும்ப பெற்றுள்ளன. அது போன்று, வியட்னாம் மற்றும் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளில் இருந்து, அன்னிய நிதி நிறுவனங்கள், முறையே 1.95 கோடி டாலர் (108 கோடி ரூபாய்) மற்றும் 4 லட்சம் டாலர் (2.23 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, நிகர அளவில் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|