பதிவு செய்த நாள்
07 ஆக2012
10:17

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில், ஆறு நாட்களாக நடந்த "தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. தினமலர், எல்.ஜி. சினிமா 3டி ஸ்மார்ட் "டிவி', மீனாட்சி பேன் ஹவுசுடன் இணைந்து நடத்திய மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சியை, ஆக.,1ல் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா திறந்து வைத்தார். ஆறு நாட்களாக குண்டூசி முதல் "குஷன்' சேர்கள் வரை, கார்பெட் முதல் கார் வரை என வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சலுகை விலையில் வாங்கி மகிழ்ச்சியில் திளைத்தனர் பார்வையாளர்கள்.
"பை' நிறைந்தவர்களுக்கு வயிறும் நிறைய, பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த உணவு பந்தலில் கூட்டம் களைகட்டியது. மனசை "ரிலாக்ஸ்' ஆக்க, 50க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் மீன்கள் மற்றும் வண்ண மீன்கள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. சிறுவர்களை "சச்சினாக' மாற்ற கிரிக்கெட் பவுலிங் மிஷின், பறவை போட்டோ கண்காட்சி, சாகச கலைஞர்களின் வியூப்பட்டிய சாகசங்கள், பெண்களை அழகுப்படுத்திய "பெண்கள் பகுதி', நம்மூரில் பார்த்திராத வெளிநாட்டு நாய்கள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை விட்டுச் செல்ல மனமில்லாமல், "இனி அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டுமா' என ஏக்கத்துடன், பை நிறைய பொருட்களுடன் விடைபெற்றனர் பார்வையாளர்கள். இக்கண்காட்சியை அபி பர்னிச்சர், பஞ்சாரஸ் பேஸ் வாஷ், வெல்டெக்ஸ் ஆடைகள், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், அனிதா ஸ்டோர், பட்டர்ப்ளை, பெப்பல்ஸ், பான் பான், சபோல்ஸ் வாட்டர் இணைந்து வழங்கினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|