பதிவு செய்த நாள்
07 ஆக2012
11:48

இந்தியாவுக்கும், பிரிமியர் கார் நிறுவனத்துக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. இந்த நிறுவனம், 1944ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல், கிரிஸ்லர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தியை துவக்கியது. 1968ம் ஆண்டு, ஃபியட் நிறுவனத்துடன் இணைந்தது. 1980ம் ஆண்டு வரை இது நீடித்தது. பின்னர், 2004ம் ஆண்டு முதல் தனித்து செயல்பட துவங்கியது.
பிரிமியர் நிறுவனம் ஏற்கனவே, "ரியோ' என்ற பெயரில், பெட்ரோலில் இயங்கும், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்( எஸ்.யு.வி.,) பிரிவில் வரும் காரை விற்பனை செய்து வருகிறது. புகை மாசு கட்டுப்பாடு விதியால், பாரத் ஸ்டேஜ் 2 மற்றும் 3 விதிகள் அமலில் உள்ள நகரங்களில் மட்டும் பெட்ரோல் ரியோ கார் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கு புனேயில் தொழிற்சாலை உள்ளது. இங்கு மாதத்துக்கு, 1,000 கார்களை அசெம்பள் செய்ய முடியும். இந்த சூழ்நிலையில், தற்போது டீஸலில் இயங்கும் ரியோ காரை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. இந்த காரில், ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட, 1.3 லிட்டர் மல்டிஜெட் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீஸல் ரியோ கார், ஒரு லிட்டருக்கு 19 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6.7 லட்சம்( எக்ஸ் ஷோரூம், புனே). தற்போதுள்ள, 66 டீலர்கள் மூலம், டீஸல் ரியோ கார் விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள், 100 டீலர்கள் என்ற அளவுக்கு எண்ணிக்கையை உயர்த்த, பிரிமியர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதவிர, பிரிமியர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் ஸ்டேஷன்கள்( பாஸ்) என்ற பெயரில், 200 சர்வீஸ் ஸ்டேஷன்களையும், பிரிமியர் நிறுவனம் அமைத்து வருகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|