பதிவு செய்த நாள்
07 ஆக2012
23:43

புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 13.35 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட (14.03 லட்சம் டன்), 5 சதவீதம் குறைவாகும் என, இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், புண்ணாக்கு ஏற்றுமதி, 2,74,635 டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,81,879 டன்) விட,3 சதவீதம் குறைவாகும்.நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில், நம் நாட்டிலிருந்து ஈரான் மிகவும் அதிகமாக,அதாவது, 4,51,915 டன் புண்ணாக்கை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 86,212 டன்னாக இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.ஈரானை தொடர்ந்து, தென் கொரியா, வியட்நாம், ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள், நம் நாட்டிலிருந்து அதிகளவில் புண்ணாக்கை இறக்குமதி செய்து கொள்கின்றன. ஏற்றுமதி செய்யப்படும் புண்ணாக்கு வகைகள், வெளிநாடுகளில் தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின்புண்ணாக்கு ஏற்றுமதி அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 9 சதவீதம் அதிகரித்து, 50.71 லட்சம் டன்னிலிருந்து, 55.20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|