பதிவு செய்த நாள்
07 ஆக2012
23:44

புதுடில்லி: தென்மேற்கு பருவமழை குறைந்ததால், நாட்டின் பல மாநிலங்களில், வேளாண் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. பொதுவாக, தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் துவங்கி, செப்டம்பர் வரை நீடிக்கும். ஆனால், இவ்வாண்டு, ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில், மழை பொழிவு மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 3ம் தேதி வரையிலுமாக, வேளாண் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று, வானிலை ஆராய்ச்சி மையம், ஆகஸ்ட் மாதத்தில், மழை பொழிவு 96 சதவீதத்தை எட்டிவிடும் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பருப்பு வகைகள்ஆகஸ்ட் 3ம் தேதி வரையிலுமாக, துவரை, உளுந்து, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவு 72.80 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே பருவத்தில், 87.50 லட்சம் ஹெக்டேராக இருந்தது. மகாராஷ்டிரா,கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை பொழிவு குறைந்துள்ளதையடுத்து, இவற்றின் உற்பத்தி குறையும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.நெல் உற்பத்திஇதே போன்று, கரீப் பருவத்தில், மழை குறைவின் காரணமாக, ஆகஸ்ட் 3ம் தேதி வரையிலுமாக, 2.37 கோடி ஹெக்டேரில் தான் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த பருவத்தில், 2.59 கோடி ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், நெல் சாகுபடி பரப்பளவு மிகவும் குறைந்துள்ளது.இருப்பினும், சென்ற ஆண்டில், நாட்டின் நெல் உற்பத்தி, மிகவும் அதிகரித்து, அதிகளவில் கையிருப்பு உள்ளதால் அரிசிபற்றாக்குறை ஏற்படாது என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரும்பு சாகுபடிகரும்பு அதிகளவில் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், குறைந்த மழை பொழிவால், வரும் பருவத்தில், இதன் சாகுபடி பரப்பளவும் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, உள்நாட்டில், 52.90 லட்சம் ஹெக்டேரில், கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில், 50.60 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கரும்பு அரவை பருவம் என்பது, அக்டோபர் மாதம் முதல்துவங்குகிறது.எண்ணெய் வித்துக்கள்பொதுவாக, கரீப் பருவத்தில், சோயாமற்றும் நிலக்கடலையே மிக அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மழை குறைந்துள்ளதால், இவ்வாண்டு, ஒட்டு மொத்த எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு குறையுமென மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில், மழை குறைவால், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு 1.45 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது.இது, கடந்த ஆண்டு இதே பருவத்தில், 1.50 கோடி ஹெக்டேராக இருந்தது.எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதையடுத்து, இவற்றின்உற்பத்தியும் குறையும். இதனால், நவம்பர் மாதம் முதல், நம் நாடு, சமையல் எண்ணெய் வகைகளை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.பருத்திநாட்டில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களில்தான், பருத்தி அதிகளவில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மழை குறைந்துள்ளதால், இதன் சாகுபடி பரப்பளவு, 100.10 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இது, கடந்த பருவத்தில், 109.90 லட்சம் ஹெக்டேராக இருந்தது.மழை குறைவால் மட்டுமின்றி,பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால், மகாராஷ்டிராவில் பல விவசாயிகள் சோயா வித்து சாகுபடிக்கு மாறியுள்ளனர்.காபி உற்பத்திகாபி உற்பத்தியில் கர்நாடக மாநிலமே முன்னிலையில் உள்ளது. இங்கு, அக்டோபர் மாதம் துவங்கும் பருவத்தில், 3,25,300 டன் காபி உற்பத்தியாகும் என, காபி வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. இது, நடப்பு ஆண்டு உற்பத்தியை (3,14,000 டன்) விட, அதிகமாகும். ஆனால், மழை குறைவால், காபி வாரியத்தின் மதிப்பீட்டு இலக்கை எட்டுவது கடினம் என, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.ரப்பர்ரப்பர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள கேரளாவில், மழை பொழிவு, 44 சதவீதம் குறைந்துள்ளது. என்றாலும், இம்மாநிலத்தில், ஒரு சில தின இடைவெளியில் மழை பொழிவு உள்ளது. இது, ரப்பர் பால் வடிப்பிற்கு சாதக மாக உள்ளது என கூறப்படுகிறது.எனவே, மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள பருவத்தில்,9,42,000 டன் ரப்பர் உற்பத்தியாகும் என்றும், இது, கடந்த ரப்பர் பருவ உற்பத்தியை (8,99,400 டன்)விட, அதிகமாகும் என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.தேயிலைஉள்நாட்டில், அசாம் மாநிலத்தில்தான், தேயிலை அதிகளவில் உற்பத்தியாகிறது. இங்கு, நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களில், வறட்சி நிலவியது. ஆனால், ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில், மழை பொழிவு அதிகரித்து காணப்பட்டது.இதனால், அங்கு தேயிலை உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில், மழை பொழிவு குறைந்துள்ளது. இதனால், ஒட்டு மொத்த அளவில், நடப்பு 2012ம் ஆண்டில், தேயிலை உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த ஆண்டில் இதன் உற்பத்தி, 98.83 கோடி கிலோவாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|