பதிவு செய்த நாள்
07 ஆக2012
23:45

புதுடில்லி: ஒரே மாதத்தில், சர்க்கரை விலை, கிலோவுக்கு, 10 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து, 41 ரூபாயை எட்டி யுள்ளது.ஏற்றுமதிவெளிநாடுகளுக்கு, 18 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாலும், பருவமழை குறைவால், சர்க்கரை உற்பத்தி சரியும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அதன் விலை உயர்ந்து வருகிறது.தமிழகத்தில், மொத்த விற்பனை சந்தையில் கடந்த மாதம் ஒரு குவிண்டால் சர்க்கரை, 2,900 ரூபாய்க்கு விற்றது. சில்லரை விற்பனையில், ஒரு கிலோ 31 ரூபாய்க்குவிற்பனையானது.இது, கிடு..கிடு..வென உயர்ந்து, தற்போது, இதுவரை இல்லாத அளவாக, ஒரு கிலோ சர்க்கரை விலை, 41 ரூபாயை எட்டியுள்ளது.எனினும், டில்லி மொத்த விற்பனை சந்தையில், சென்ற திங்களன்று, ஒரு குவிண்டால் சர்க்கரை விலை, 100 ரூபாய் உயர்ந்து, 4,000 ரூபாயாக இருந்தது.மொத்த விற்பனைஅதாவது, ஒரே மாதத்தில், மொத்த விற்பனையில் குவிண்டாலுக்கு 1,100 ரூபாயும், சில்லரை விற்பனையில் கிலோவுக்கு 11 ரூபாயும் உயர்ந்துள்ளது.ஆலைகளின் சர்க்கரை அளிப்பு குறைந்துள்ளதும், பதுக்கலும், சர்க்கரை விலை உயர காரணம் என்று கூறப்படுகிறது.சந்தையில், "பாக்கெட்டில்' அடைக்கப்பட்ட"பிராண்டட்' சர்க்கரை ஒரு கிலோ 45லிருந்து 48 ரூபாய் வரை விற்கப்படுகிறது.விதிமுறைசர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, சென்ற மாதம் வெளிச்சந்தையில் கூடுதலாக, 2.66 லட்சம் டன் சர்க்கரை வினியோகத்திற்கு அனுமதித்தது. மேலும், ஜூன்-செப் வரையிலான காலாண்டில், 45 லட்சம் டன் சர்க்கரையை வெளிச் சந்தையில் விற்பனை செய்வதற்கானவிதிமுறைகளையும் தளர்த்தியது.இதன்படி, சர்க்கரை ஆலைகள், அவற்றுக்கான ஒதுக்கீட்டில் 30 சதவீதத்தை ஜூலையிலும், 70 சதவீதத்தை ஜூலை மற்றும் ஆகஸ்டிலும், 30 சதவீதத்தை செப்டம்பர் மாதத்திலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|