பதிவு செய்த நாள்
07 ஆக2012
23:46

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க் கிழமையன்றும் மிக நன்றாக இருந்தது. அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், வரிக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படும் மற்றும் வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற, மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இந்நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் கடன் பத்திரங்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு, ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம்ஏற்றத்துடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 188.82 புள்ளிகள் உயர்ந்து, 17,601.78 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,641.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,417.92 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்தும், எட்டு நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 54.15 புள்ளிகள் அதிகரித்து, 5,336.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,350.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்ச மாக, 5,281.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|