பதிவு செய்த நாள்
08 ஆக2012
10:20

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65.02 புள்ளிகள் அதிகரித்து 17666.80 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 20.45 புள்ளிகள் அதிகரித்து 5357.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிக நன்றாக இருந்தது. அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், வரிக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படும் மற்றும் வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற, மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இந்நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் கடன் பத்திரங்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு, ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|