பதிவு செய்த நாள்
09 ஆக2012
00:23

மும்பை:நாட்டின் பங்குச் சந்தை புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.இந்நிலையில், ஐரோப்பாவில் ஐ.என்.ஜி குழுமம் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சரிவடைந்து போயின. இது, சந்தை மதிப்பீட்டை விட குறைவு என்ற அடிப்படையில் அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் மந்தமடைந் தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இருப்பினும், சர்வதேச பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய வங்கிகள் நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நிலைப்பாட்டால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்று நடை பெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், நுகர் பொருட்கள், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், பொறியியல், வங்கி, தகவல் தொழில் நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 1.22 புள்ளிகள் குறைந்து, 17,600.56 புள்ளிகளில் நிலைபெற்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை, உயர்ந்தும், எட்டு நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், "நிப்டி' 1.30 புள்ளிகள் உயர்ந்து, 5,338.00 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,377.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,331.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|