பதிவு செய்த நாள்
09 ஆக2012
00:25

புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 17 சதவீதம் உயர்ந்து 5,770 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அது போன்று, இதே காலத்தில், ஐரோப்பியா நாடுகளில் இருந்து, இந்தியா மேற்கொண்ட இறக்குமதியும் 29 சதவீதம் உயர்ந்து, 9,150 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா:இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா ராஜ்ய சபாவில் கூறியதாவது:இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்க ளிப்பு 30 சதவீதமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், நாட்டின் ஏற்றுமதி குறைந்துள்ளது. உள்நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, எடுக்கப்பட்ட கடுமையான நிதி கொள்கையால், குறிப்பாக தொழில்துறையில் முதலீடும், வளர்ச்சியும் குறைந்துள்ளன.
சென்ற ஜூன் மாதம், நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக 5.64 சதவீதம் சரிவடைந்து, 2,500 கோடி டாலராக குறைந்துள்ளது. திருத்தப்பட்ட வணிக முத்திரை சட்டத்தின் கீழ், புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக் கப்படும். இதையடுத்து, இந்திய நிறுவனங்கள் அவற்றின் வணிக முத்திரையை, ஒரே விண்ணப்பத்தின் கீழ், 87 உறுப்பு நாடுகளில் பதிவு செய்து கொள்ளலாம்.
அதுபோன்று, அயல்நாட்டு நிறுவனங்களும், அவற்றின் வணிகமுத்திரைகளை, 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் பதிவு செய்து கொள்ளலாம்.இந்தியாவில் பன்முக பிராண்டுகளின் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் எதுவும் இல்லை.
அன்னிய நேரடி முதலீடு :இத்திட்டத்திற்கு டில்லி, மணிப்பூர், தாமன் மற்றும் டையூ, தாத்ரா நாகர ஹவேலி ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே, இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளன. ஒரே பிராண்டு பொருள்களின் சில்லரை விற்பனை யில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை. சென்ற மே மாத நிலவரப்படி, ஒரே பிராண்டு சில்லரை விற்பனை துறையில், ஒட்டு மொத்த அன்னிய நேரடி முதலீடு 204 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வாறு இணை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|