பதிவு செய்த நாள்
09 ஆக2012
00:27

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான, ஆறு மாத காலத்தில், இந்தியாவில் நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 2,830 கோடி டாலராக (1.55 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
ஆலோசனை நிறுவனம்:இது, கடந்த 2011ம் ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப் பட்டதை விட, (3,540 கோடி டாலர்-1.94 லட்சம் கோடி ரூபாய்) 20 சதவீதம் குறைவு என, சர்வதேச ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தார்ன்டன் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை, இந்தியாவில் வரி நெறிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் போன்றவற்றால், நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட, இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, மதிப்பின் அடிப்படையில் குறைந்துள்ளது. இருப்பினும், எண்ணிக்கை அடிப் படையில், இது, 505லிருந்து, 544 ஆக உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி :கடந்த 2008ம் ஆண்டில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், சர்வதேச அளவில், பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, உலகளவில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இந்த சுணக்க நிலை, 2010ம் ஆண்டு வரை நீடித்தது. அதன் பிறகு, இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் இதர நாடுகளிலும், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.
நடப்பாண்டில், இதுவரையிலுமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவை துறைகள், மருந்து, ஆரோக்ய பராமரிப்பு, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ஊடகம், தொலைத்தொடர்பு,நிதி சேவைகள் ஆகிய துறைகளில் அதிக ளவில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டிற்குள், மேற் கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தலில், சேசகோவா-ஸ்டெர்லைட் மற்றும் டெக் மகிந்திரா- சத்யம் ஆகியவை மிகப் பெரியவைகளாக இருந்தன.
தனியார் பங்கு முதலீடு:கணக்கீட்டு காலத்தில், தனியார் பங்கு முதலீட்டு பிரிவின் கீழ், 380 கோடி டாலர் (20,900 கோடி ரூபாய்) மதிப்பிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டதை விட, 31 சதவீதம் குறைவாகும் என, கிராண்ட் தார்ன்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டில், உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தும் போக்கு அதிகரித்து காணப்பட்டது. ஆனால், 2011ம் ஆண்டில், இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டின் ஆறு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், விறுவிறுப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேக்ஸ் நியூயார்க் லைப் : நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவில் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின், இந்திய சில்லரை மற்றும் வர்த்தக வங்கி சேவையை, எச்.எஸ்.பீ.சி., கையகப்படுத்தியது. இதுதவிர, பிரமல் குழுமம், அமெரிக்காவை சேர்ந்த டெசிஷன் ரிசோர்சஸ் குழுமத்தை கையகப்படுத்தியதும், மிட்சுசி சுமிட்டோமோ இன்சூரன்ஸ், மேக்ஸ் நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முதலீடு மேற்கொண்டதும் அடங்கும் என, கிராண்ட் தார்ன்டன் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|