பதிவு செய்த நாள்
09 ஆக2012
09:54

தேவாரம்: ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், தக்காளி விலை சரிந்துள்ளது. பறிப்புக் கூலி, விற்பனை கமிஷன் தொகையை கூட ஈடு செய்ய முடியாமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விளையும் தக்காளி, ஒட்டன்சத்திரம், தேவாரம், சின்னமனூர் சந்தைகள் மூலம் திருச்சி, திருநெல்வேலி, கேரளா, சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம், ஒரு பெட்டி தக்காளி (15 கிலோ), 350 ரூபாய்க்கு, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது; இந்த வாரம் சரிவடைந்துள்ளது. ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக, 60 ரூபாய்க்கு விற்பனையானது; கிலோ- 4 ரூபாய். இதுகுறித்து கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறியதாவது: ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், தேனி உட்பட மாவட்டங்களில் விளைச்சலும் அதிகம். இதனால் விலை சரிந்துள்ளது, என்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு பெட்டி தக்காளி, 50 ரூபாய்க்கும் குறைவாக விற்பதால், நஷ்டம் ஏற்படும்,' என்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|