பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள்பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள் ... 6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை 6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் பொது பணவீக்கம் 6.87 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
00:45

புதுடில்லிநாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற ஜூலை மாதத்தில், 6.87 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், 7.25 சதவீதம் என்றளவில் இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில், நாட்டின் பணவீக்கம், 9.36 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறியீட்டு எண் சென்ற ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்த உணவு பணவீக்கம், 10.06 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், 10.81 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்த உணவு பணவீக்கம், 8.19 சதவீதம் என்றளவில் இருந்தது.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கத்தில், உணவுப் பொருட்களின் பங்களிப்பு, 14.3 சதவீதம் என்றளவில் உள்ளது.
சென்ற ஜூலை மாதத்தில், தயாரிப்பு துறையின் கீழ் வரும், ஜவுளி, காகிதம் மற்றும் காகித பொருட்கள், சிமென்ட் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்திருந்தது. இதையடுத்து,தயாரிப்பு பொருட்களின் பணவீக்கம், 5.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், 5 சதவீதம் என்றளவில் இருந்தது. உணவு பொருட்கள்பிரிவின் கீழ், உருளைக்கிழங்கின் விலை, 73 சதவீதம் உயர்ந்துள்ளது.
கணக்கீட்டு மாதங்களில், அரிசி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை, ஆண்டுக் கணக்கில், முறையே, 10.12 சதவீதம், 8.29சதவீதம் மற்றும் 28.26 சதவீதம்என்றளவில் உயர்ந்துள்ளன.முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றின் விலை, 16 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது. பால் மற்றும் காய்கறி விலை, முறையே 8.01 சதவீதம் மற்றும் 24.11 சதவீதம் என்ற அளவில் இருந்தன.
பழங்கள்கணக்கீட்டு மாதங்களில், வெங்காயம் மற்றும் பழங்களின் விலை குறைந்துள்ளது. பழங்கள் விலை, மைனஸ் 0.15 சதவீதம் என்றளவிலும், வெங்காயத்தின் விலை, மைனஸ் 9.81 சதவீதம் என்றளவிலும் வீழ்ச்சி கண்டுள்ளன.சென்ற ஜூலை மாதத்தில், உணவு சாராத பொருட்களில் இடம்பெற்றுள்ள நூலிழை, எண்ணெய் வித்துக்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.
நூலிழை, எண்ணெய் வித்துக்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை, முறையே, 5.89 சதவீதம், 25.22 சதவீதம் மற்றும் 8.43 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு, எரிபொருள் பணவீக்கம், 5.98 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்துள்ளது. இது, சென்ற ஜூன் மாதத்தில், 10.27 சதவீதமாக மிகவும் உயர்ந்திருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)