கடந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே வருவாய் ரூ.5,608 கோடியாக உயர்வுகடந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே வருவாய் ரூ.5,608 கோடியாக உயர்வு ... போஷ் நிறுவனம் லாபம் ரூ.247 கோடி போஷ் நிறுவனம் லாபம் ரூ.247 கோடி ...
சென்ற ஜூலையில்... பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
11:05

புதுடில்லி: நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 423 கோடி டாலராக (23,265 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 504 கோடி டாலராக (27,720 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது. ஆக, நடப்பாண்டு ஜூலை மாதத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 16 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவிலான பொருளாதார தேக்க நிலையால், ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில், பொறியியல் சாதனங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, சென்ற ஜூலை மாதத்தில் இதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 9 சதவீதம் சரிவடைந்து, 1,860 கோடி டாலராக (1,02,300 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இரும்பு, உருக்கு, விமான மற்றும் விண்கல உதிரிபாகங்கள்,கப்பல்கள், கட்டுமான இயந்திரங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி மிகவும் சரிவடைந்துள்ளது.

சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,900 கோடி டாலராக (3,24,500 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 4,970 கோடி டாலராக (2,73,350 கோடி ரூபாய்) இருந்தது. நம்நாட்டிலிருந்து, போக்குவரத்து சாதனங்கள், இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள், போல்ட்டுகள், நட்டுகள் போன்றவை அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் பல்வேறு பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)