நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: பிரதமரின் பொருளாதார ... ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
பல்வேறு வசதிகளுடன் ரூ.5999ல் புதிய டேப்லட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2012
11:04

கோடெக் டிஜிட்டல் நிறுவனம் பன்டேப் பிட் என்ற புதிய டேப்லெட்டைக் களமிறக்கியுள்ளது ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் ஏராளமான அப்ளிகேசன்களுடன் வருகிறது. இதன் 7 இன்ச் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இந்த டேப்லெட் 512எம்பி டிடிஆர்3 ரேமுடன் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் வருவதால் இதன் இயங்கு வேகம் அபாரமாக இருக்கும். இந்த டேப்லெட்டின் 4ஜிபி இன்டர்னல் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்கலாம். இதன் 0.3எம்பி முகப்பு கேமரா சிறந்த வீடியோ உரையாடலை வழங்கும். இந்த டேப்லெட் ஒரு 3 ஆக்சிஸ் அக்சிலரேசன் சென்சாரையும் வழங்குகிறது.இதில் இருக்கும் எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் வழியாக மவுஸ் மற்றும் கீபோர்ட் ஆகியவற்றி இந்த டேப்லெட்டோடு இணைத்துக் கொள்ளலாம். இந்த டேப்லெட் கைட் மை ட்ரீட்மென்ட் என்ற அப்ளிகேசனுடன் வருகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றிய விவரங்களை இந்த டேப்லெட்டில் அறிந்து கொள்ளலாம். அதோடு மருத்துவர்களைச் சந்திக்கும் நேரத்தையும் இந்த டேப்லெட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பல்வேறு வசதிகளோடு இந்த டேப்லெட் பல சூப்பரான விளையாட்டுகளையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆங்கிரி பேர்ட், செஸ் மற்றும் டிக் டேக் டோ மற்றும் பல கேம்களையும் இதி்ல விளையாடலாம். இந்த புதிய டேப்லெட் இந்திய சந்தையில் ரூ.5,999க்கு விற்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)