பதிவு செய்த நாள்
18 ஆக2012
15:27

புதுடில்லி : ஏ.டி..எம் மையங்களின் எண்ணிக்கை இன்னும் 2 ஆண்டுகளில் 2 மடங்காக உயரும் என நிதியமைச்சர் பா.சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், உயர் படிப்புகளுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வங்கி அதிகாரிகள் உடன் கடன் தொகை வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் கொடுக்காத வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிதம்பரம் எச்சரித்துள்ளார். மேலும் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல், பணம் செலுத்தும் முறையையும் கொண்டு வர வேண்டும் என்றும், இன்னும் 2 ஆண்டுகளில் ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை காட்டிலும் 2 மடங்காக உயரும் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|