டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க திட்டமில்லை டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க திட்டமில்லை ... தங்கம் விலை உயர்வு தங்கம் விலை உயர்வு ...
சென்ற ஜூலை மாதத்தில்...சில்லரை பணவீக்கம் 9.86 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
23:47

புதுடில்லி:சென்ற ஜூலை மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் 9.93 சதவீதத்தில் இருந்து 9.86 சதவீதமாக குறைந்துள்ளது.நறுமண பொருட்கள்மதிப்பீட்டு மாதத்தில், காய்கறி விலை உயர்ந்திருந்த போதிலும், நறுமணப் பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றின் விலை குறைந்திருந்தன. இதனால், சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், தற்காலிக மதிப்பீட்டின்படி 10.02 சதவீதமாக அறிவிக்கப்பட்ட, சில்லரை பணவீக்கம், மறுமதிப்பீட்டில் 9.93 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு மாதத்தில், காய்கறிகள் விலை, மிகவும் அதிகபட்சமாக 27.33 சதவீதம் வரை உயர்ந்திருந்தன. இதை தொடர்ந்து, சமையல் எண்ணெய் விலை 17.37 சதவீதமும், பருப்பு வகைகள் விலை 12.49 சதவீதமும் உயர்ந்திருந்தது.முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றின் விலை 11.11 சதவீதமும், குளிர்பானங்கள் விலை 9.26 சதவீதமும் உயர்ந்திருந்தன. தானிய வகைகளின் விலை 6.45 சதவீதம் உயர்ந்திருந்தது. சர்க்கரை விலை 9.06 சதவீதம் அதிகரித்திருந்தது. உணவு மற்றும் குளிர்பானங்கள், துணிகள், படுக்கை மற்றும் காலணி துறைகளின் பணவீக்கம், தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே இருந்தன. சென்ற ஜூலையில், ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில், சில்லரை பணவீக்கம், முறையே 9.76 சதவீதம் மற்றும் 10.10 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.பொது பணவீக்கம்சென்ற ஜூன் மாத நிலவரப்படி, ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில், சில்லரை பணவீக்கம், முறையே 9.65 சதவீதம் மற்றும் 10.44 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான, நாட்டின் பொது பணவீக்கம், சென்ற ஜூலையில் 6.87 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய ஜூன் மாதம் 7.25 சதவீதமாக காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)