பதிவு செய்த நாள்
24 ஆக2012
01:24

புதுடில்லி:நடப்பாண்டு ஜூலை மாதத்தில், சர்வதேச உருக்கு உற்பத்தி, 13 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, (12.70 கோடி டன்) 2.36 சதவீதம் அதிகமாகும்.சென்ற ஜூலை மாதத்தில், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட, உருக்கு உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, 65 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என, சர்வதேச உருக்கு உற்பத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய நாடுகளின் உருக்கு உற்பத்தி, 3.8 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உருக்கு உற்பத்தி, 4.2 சதவீதம் உயர்ந்து, 61.70 லட்சம் டன்னாகவும், இந்தியாவின் உற்பத்தி, 5.4 சதவீதம் அதிகரித்து, 65 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளன.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் உற்பத்தி முறையே, 93 லட்சம் டன் மற்றும் 59 லட்சம் டன் என்றளவில் அதிகரித்துள்ளன.ஜெர்மனி உருக்கு உற்பத்தி, 2.1 சதவீதம் குறைந்து, 36 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து முறையே உற்பத்தி, 10 லட்சம் டன் மற்றும் 9 லட்சம் டன் என்ற அளவில் உள்ளன.ரஷ்யாவின் உற்பத்தி, 3.6 சதவீதம் உயர்ந்து, 59 லட்சம் டன்னாகவும், அமெரிக்காவின் உற்பத்தி, 74 லட்சம் டன் என்ற அளவிலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|