பதிவு செய்த நாள்
24 ஆக2012
01:25

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கு, 1,800 கோடி டாலராக (99 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது. இது, முதலில், 1,700 கோடி டாலராக (93,500 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருந்தது என, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பனபகா லட்சுமி பார்லிமென்ட்டில் தெரிவித்தார்.இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 65 சதவீதம் என்றஅளவில் உள்ளது.நடப்பு நிதியாண்டில், 4,000 கோடி டாலருக்கு (2.20 லட்சம் கோடி ரூபாய்) ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது, முந்தைய நிதியாண்டில், 3,231 கோடி டாலர் (1.77 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), ஜவுளித் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 15,886 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, 18 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,360 கோடி டாலராக இருந்தது. ஏற்றுமதி கடனுக்கான வட்டி சலுகை நீட்டிப்பு போன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டில், இதன் ஏற்றுமதி இலக்கு, 1,800 கோடி டாலராக (99 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|