பதிவு செய்த நாள்
24 ஆக2012
01:27

மும்பை:நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலுமாக, வங்கிகள் வழங்கிய உணவு சாராக் கடன், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 16.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 46,23,675 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வளர்ச்சி:நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடன் வளர்ச்சி, சராசரியாக 17 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவை ஒட்டியே உள்ளது.
பொருளாதார சுணக்க நிலையால், நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து பெறும் கடன் அளவு குறைந்துள்ளது. பல நிறுவனங்கள், நடைமுறை செலவினத்திற்காக, குறைந்த கால அடிப்படையில், வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன. அதேசமயம், மூலதன செலவிற்காக கடன் வாங்குவது மிகவும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வங்கிகளிடமிருந்து, கடன் வாங்குவது குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ. ஐ), அண்மையில் வீடு மற்றும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பண்டிகை காலம்:பொதுவாக, பண்டிகை காலங்களையொட்டி, அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில், வங்கிகளில் கடன் பெறுவது அதிகரிக்கும் என, கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2011-12ம் நிதியாண்டில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், வங்கி கடன் வளர்ச்சி, 7 சதவீதமாக இருந்தது.
அதேசமயம், ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில், இது, 6 சதவீதம் என்றளவில் இருந்தது. மேலும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், வங்கிகள் வழங்கிய கடன் 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இது, முதல் ஆறு மாத காலத்தில், 5 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்பட்டது.டெபாசிட்:நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலுமாக,வங்கிகள் திரட்டிய டெபாசிட், 62,82,353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 14.83 சதவீதம் அதிகமாகும். இருப்பினும் இது, ரிசர்வ் வங்கி, நடப்பு முழு நிதியாண்டிற்கு, வங்கிகள் திரட்ட வேண்டிய டெபாசிட் இலக்கான 16 சதவீதத்தை விட குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|