பதிவு செய்த நாள்
24 ஆக2012
01:31

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் நடைபெற்று இறுதியாக சமனில் முடிவடைந்தது.அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டின் மத்திய வங்கி கூட்டத்தில், நிதிக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக, நேற்று ஆசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல்தொழில்நுட்பம், ஆரோக்ய பராமரிப்பு, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மோட்டார் வாகனம், பொறியியல் சாதனங்கள், மின்சாரம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்திருந்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 3.36 புள்ளிகள் உயர்ந்து, 17,850.22 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,972.54 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,792.87 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 2.50 புள்ளிகள் அதிகரித்து, 5,415.35 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|