ரசாயன கலப்பு இல்லாத...இயற்கை உணவு பொருட்கள் சந்தை ரூ.1,000 கோடியாக உயர்வுரசாயன கலப்பு இல்லாத...இயற்கை உணவு பொருட்கள் சந்தை ரூ.1,000 கோடியாக உயர்வு ... தங்கம் விலை விர்ர்ர்... சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது தங்கம் விலை விர்ர்ர்... சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி காரில் புது வேரியன்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2012
13:06

சொகுசு கார்கள் விற்பனையில், ஹோண்டா சிட்டி காருக்கு தனி இடம் உண்டு. இந்த கார் ஏற்கனவே, ஏழு வேரியன்ட்களில் கிடைக்கிறது. தற்போது, எஸ்- ஏடி என்ற புது வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் இந்த புதிய கார் வெளி வந்துள்ளது. இந்த காரின் விலை ரூ.9.09 லட்சம்( எக்ஸ்ஷோ ரூம்). ஏற்கனவே விற்பனையில் உள்ள மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்ட ஹோண்டா சிட்டி காரை விட, இந்த புதிய காரின் விலை ரூ.70,000 அதிகம். இதற்கு முன், ஹோண்டா சிட்டி காரில், ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன், வி- ஏடி மாடல் கார் மட்டுமே விற்பனையில் இருந்தது. தற்போது எஸ் - ஏடி என்ற புதிய வேரியன்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில், 1.5 லிட்டர் ஐ-விடிஇடி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளத. இந்த காரின் எடை, 1,150 கிலோ. மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்ட சிட்டி காரை விட, புதிய காரின் எடை, 50 கிலோ அதிகம். இந்த கார், ஒரு லிட்டருக்கு, 15.6 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொகுசு கார்கள் வரிசையில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஏற்கனவே, மாருதி சுசூகியின் எஸ்எக்ஸ்4, வோக்ஸ்வாகன் வென்டோ, புதிய ஃபோர்டு ஃபியஸ்டா, ஸ்கோடாவின் ரேபிட் மற்றும் ஹுண்டாய் நிறுவனத்தின் வெர்னா ப்ளூயிடிக் ஆகிய கார்கள் விற்பனையில் உள்ளன. இதில் வெர்னா கார் மட்டுமே டீஸலில் இயங்கும் திறன் கொண்டது. மற்ற கார்கள் பெட்ரோலில் இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)