பதிவு செய்த நாள்
24 ஆக2012
16:53

செக் நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா கார் நிறுவனம், வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரேபிட் என்ற மாடல் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் விலை ரூ.6.90 லட்சத்தில் இருந்து ரூ.9.50 லட்சம் ( எக்ஸ்ஷோரூம், டில்லி) என்ற அளவில் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கிறது.
இதில் பெட்ரோல் ரேபிட் காரை விற்பனை செய்ய, ஸ்கோடா நிறுவனம் புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மாதம் தோறும் ரூ.9,999 இ.எம்.ஐ., தொகையை செலுத்தினால் போதும், ரேபிட் காரை வாங்கலாம். எனினும், குறிப்பட்ட காலத்துக்கு மட்டுமே இந்த சலுகை அமலில் இருக்கும். மேலும் ரேபிட் காரின் பேஸ் மாடலுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். மொத்தம், 48 மாதங்களுக்கு இ.எம்.ஐ., தொகை செலுத்த வேண்டி இருக்கும். இ.எம்.ஐ., காலம் முடிந்த பிறகு, ஒரே கட்டமாக, ரூ.1.38 லட்சம் தொகையை செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளும் இந்த சலுகை திட்டத்தில் உள்ளது. வோக்ஸ்வாகன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்கோடா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் மூலம் இந்த சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|