பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:37
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில், உளுந்து மூட்டைக்கு 200, ரவை, மைதா மூட்டைக்கு 90 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சர்க்கரை மூட்டைக்கு 100, சூரிய காந்தி எண்ணெய் டின்னுக்கு, 300 ரூபாய் குறைந்துள்ளது.சர்க்கரை மூட்டைக்கு, 3,805 லிருந்து 3,705, சூரியகாந்தி எண்ணெய், 1,590 லிருந்து 1,290 குறைந்த நிலையில், கடலை புண்ணாக்கு மூட்டைக்கு, 4,200 லிருந்து 4,400, உளுந்து மூட்டைக்கு, 4,300 லிருந்து 4,500, பர்மா உளுந்து, 4,050 லிருந்து 4,100, பர்மா உளுந்தம் பருப்பு, 5,400 லிருந்து 5,700, மைதா 2,710 லிருந்து 2,800, ரவை, 2,710 லிருந்து 2,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.கடலை எண்ணெய் டின்னுக்கு 1,850, பாமாயில் 1,035, நிலக்கடலை பருப்பு மூட்டைக்கு, 5,500, பொடி உளுந்து, 200, உளுந்தம் பருப்பு, 6,100,பொடி உளுந்தம்பருப்பு, 5,600, துவரை 5,000, பொடித் துவரை 4,200, துவரம் பருப்பு7,300, பொடி துவரம் பருப்பு 6,400, பாசிப்பயறு நாடு 6,100, லயன் பாசிப்பயறு 6,100, பாசிப் பருப்பு 6,400, பொடிப் பாசிப் பருப்பு 6,200, கொண்டைக் கடலை 5,900, பொரி கடலை 4,380 ஆக விலை உள்ளது."மத்திய தொகுப்பில் இருந்து, சர்க்கரை ஒதுக்கீடு தொடர்வதால், இதன் விலை குறைந்துள்ளது' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|