பதிவு செய்த நாள்
28 ஆக2012
11:54

ராமேஸ்வரம்: இறால் விலை வீழ்ச்சியால், ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடிக்க செல்வது வெகுவாக குறைந்துள்ளது. ஜப்பான் உட்பட சில நாடுகளில், இந்திய இறால் மீன்கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால், இறால் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. ராமேஸ்வரத்தில் 450, 500, 550 என மூன்று தரமாக விற்கப்படும் இறால் விலை, நேற்று முன்தினம் 250, 300, 350க்கே விலை போனது. இதனால் மீனவர்களுக்கு, தலா 4,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, பெரும்பாலான படகுகள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 50க்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்க சென்றன. இது குறித்து ராமேஸ்வரம், மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது: ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட, இறால் மீன்கள் இருப்பில் உள்ளன. இந்நிலையில், பிடித்து வரப்படும் இறால் மற்றும் கணவாய் மீன்களை வியாபாரிகள், குறைந்த விலைக்கே வாங்குகின்றனர். நேற்று முன்தினம், மட்டும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு, 60 லட்ச ரூபாய் வரை, இழப்பு ஏற்பட்டது. விலை சீராகும் வரை, படகுகளை கடலுக்கு அனுப்ப முடியாது, என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|