தங்கம் விலை திடீர்‌ உயர்வு: சவரனுக்கு ரூ.400 உயர்ந்ததுதங்கம் விலை திடீர்‌ உயர்வு: சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது ... நடப்பு 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில்...முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 1.8 சதவீதமாக சரிவு நடப்பு 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில்...முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 1.8 ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜூரோ ஸ்போர்ட் கார் விலை குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2012
16:50

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி கார் நிறுவனம், இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பஜூரோ எஸ்.யு.வி., காரை விற்பனை செய்து வருகிறது. இதில், பஜூரோ ஸ்போர்ட் கார், கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாதத்துக்கு, 120 கார்கள் என, இதுவரை 650 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பஜூரோ ஸ்போர்ட் கார், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, சுங்க வரிக்கு ஆட்படுகிறது. எனவே இதன் விலை ரூ.23.53 லட்சம் என்ற அளவில் உள்ளது.
இந்த சூழ்நிலையில், சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள தொழிற்சாலையில், செப்டம்பர் மாதம் முதல், பஜூரோ கார், அசெம்பள் செய்யப்பட உள்ளது. தாய்லாந்தில் இருந்து உதிரிபாகங்கள் வரவழைக்கப்பட்டு, இங்கு இந்த கார் உருவாக்கப்படும். எனவே, இந்த காரின் விலை, 20 சதவீதம் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் எஸ்.யு.வி., கார்கள் விற்பனையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தான் முதலிடத்தில் உள்ளது. மாதத்துக்கு, 1,200 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது ஃபார்ச்சூனர் காரின் விலை ரூ.20 லட்சத்தில் துவங்கிறது. அதுவும், 2 வீல் டிரைவ் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட ஃபார்ச்சூனர் காருக்கு தான் இந்த விலை. எனவே, செப்டம்பர் மாதத்துக்கு பிறகு, பஜூரோ ஸ்போர்ட் காரின் விலை ரூ.20 லட்சம் என்ற அளவில் குறையும் போது, ஃபார்ச்சூனர் காருக்கு கடும் போட்டி ஏற்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.
பஜூரோ ஸ்போர்ட் காரில், 2.5 லிட்டர் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டது. தேவைப்பட்டால், 4 வீல் டிரைவ் வசதிக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)