பதிவு செய்த நாள்
02 செப்2012
00:27

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்., முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 2.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் மதிப்பீட்டு இலக்கில், 51.5 சதவீதம் என, தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு (சி.ஏ.ஜி.)தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், அரசின் வருவாய், 17.4 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. செலவினம், 29.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. ஆக, அரசின் வருவாயை காட்டிலும், செலவினம் அதிகரித்துஉள்ளதால், நிதிப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 5.76 சதவீதமாக அதிகரித்திருந்தது. நடப்பு முழு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 5.1 சதவீதமாக (5.13 லட்சம் கோடி ரூபாய்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|