பதிவு செய்த நாள்
02 செப்2012
00:32

சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 50 ரூபாயும், சவரனுக்கு, 400 ரூபாயும் உயர்ந்துள்ளது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம், 2,902 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,216 ரூபாய்க்கும் விற்பனையானது.இந்நிலையில், நேற்று, ஒரே நாளில் தங்கம் விலை, கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 2,952 ரூபாய்க்கும், சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 23,616 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 540 ரூபாய் உயர்ந்து, 31,575 ரூபாய்க்கு விற்பனையானது.வெள்ளி விலை, கிராமுக்கு, 2.30 ரூபாய் உயர்ந்து, 62.90 ரூபாயிலிருந்து, 65.20 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை விற்பனையாளர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பெர்னகி, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக, அதிகளவில் கடன் பத்திரங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும் என, அறிவித்துள்ளார். இதையடுத்து, டாலர் புழக்கம் குறைவதுடன் அதில் மேற்கொள்ளப்படும் முதலீடும் குறைய வாய்ப்புள்ளது. இதன் எதிரொலியாக, தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|