பதிவு செய்த நாள்
04 செப்2012
23:51

புதுடில்லி:நாட்டின் சிமென்ட் உற்பத்தி, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 34.96 கோடி டன்னாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் 33.61 கோடி டன்னாக இருந்தது. மேலும், நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் சிமென்டிற்கான தேவை, 26.54 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா பார்லிமென்டில் தெரிவித்தார்.
மேலும், சில மாநிலங்களின் துறைகள் மற்றும் தொழில்துறை அமைப்புகள், பயன்படுத்தப்பட்ட பொறியியல் சாதனங்களை அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டுள்ளன. இதன் விளைவாக, கடந்த 2003-04ம் நிதியாண்டில், 650 கோடி டாரலாக இருந்த இதன் இறக்குமதி, தற்போதைய மதிப்பீட்டின் படி, 4,000 கோடி டாலரை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுமான நிறுவனங்கள், ஜவுளி ஆலைகள் மற்றும் இயந்திர கருவிகள் தயாரிப்பு துறைகள் ஆகியவை, அதிகளவில் பயன்படுத்தப்பட்ட பழைய பொறியியல் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டுள்ளன என, அமைச்சர் சிந்தியா மேலும் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|