பதிவு செய்த நாள்
04 செப்2012
23:54

சிங்கம்புணரி:வெளி மாநிலங்களில் தேங்காய் விற்பனை குறைந்து விட்டதால், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.சிங்கம்புணரி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. வியாபாரிகள் இங்கிருந்து வட மாநிலங்களுக்கு தேங்காய்களை அனுப்புகின்றனர். வட மாநிலங்களில் தேங்காய் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை குறைந்துள்ளது. 1,150 தேங்காய்கள் 2,150 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இவை, 5,500 ரூபாய் வரை விலை போயின. தேங்காய் வெட்டுவது, வண்டி வாடகை, ஏற்று, இறக்கு கூலி பல மடங்கு உயர்ந்துள்ளது. இந் நிலையில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள், வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
விவசாயி ஆண்டவர் கூறியதாவது:மரத்தில் ஏறி தேங்காய் வெட்டுபவர்களுக்கு 600 ரூபாய் கூலி தர வேண்டியுள்ளது. வேன் வாடகை, ஏற்ற, இறக்க கூலி ஆறுமடங்கு உயர்ந்துள்ளது. விலை வீழ்ச்சியால், தேங்காய் விற்கும் தொகை, கூலி கொடுக்கக் கூட போதவில்லை.
வியாபாரி கருணாநிதி கூறியதாவது: வடமாநிலங்களில் போதிய மழையில்லாமல் தேங்காய் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆடி மாத விழா காலத்திற்கு அனுப்பிய தேங்காய் விற்பனையாகாமல் அங்கு தேங்கியுள்ளன. நாங்கள் 2,500 ரூபாய்க்கு வாங்கும் தேங்காயை பக்குவப்படுத்தவே 700 ரூபாய் வரை செலவாகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|