பதிவு செய்த நாள்
04 செப்2012
23:58

மும்பை:சென்ற ஜூலை வரையிலுமாக வங்கிகள் வழங்கிய கார் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அதேசமயம், நுகர்வோர் சாதனங்களுக்காக வழங்கப்பட்ட கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களில், வீட்டு வசதிக்கு அடுத்தபடியாக, கார் வாங்குவதற்காக வழங்கப்பட்ட கடன், ஜூலை 26ம் தேதி வரையிலுமாக, 1,00,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, ஆண்டுக் கணக்கில், 20 சதவீத வளர்ச்சியாகும். இது, வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடனில், 17 சதவீதம் ஆகும்.வழங்கப்பட்ட மொத்த கார் கடனில், டீசலில் இயங்கும் கார்களுக்காக, வங்கிகள் வழங்கிய கடன் மிகவும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் பிரதீப் சவுத்ரி கூறுகையில், "வட்டி விகிதம் குறைக்கப்பட்டதையடுத்து, வங்கி வழங்கிய மாதாந்திர வாகன கடன் 972 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முன்பு 550 கோடி ரூபாயாக இருந்தது. மாருதி தொழிற்சாலை மூடப்பட்டு இருந்த நிலையிலும், வங்கி நாள் ஒன்றுக்கு, நாடு தழுவிய அளவில் சராசரியாக, 1,800 கார்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|