பதிவு செய்த நாள்
07 செப்2012
14:50

இந்தியாவில் ஸ்கேலா மிட்சைஸ் காரை ரினால்ட் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் கிடைக்கும். நிசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் மைக்ரா ஹேட்ச்பேக் காரை பல்ஸ் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து ரினால்ட் விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று, தற்போது நிசானின் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் சன்னி செடான் காரை ஸ்கேலா என்ற பெயரில் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் சிறு சிறு மாறுதல்களை செய்து சன்னியை ஸ்கேலாவாக மாற்றியிருக்கிறது ரினால்ட். சன்னியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஸ்கேலா வந்திருக்கிறது. பெட்ரோலில் மற்றும் டீசலில் இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய மிட்சைஸ் செடான் கார் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கும். அதேநேரத்தில் நிசான் சன்னியை விட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு கூடுதலான விலையில் ஸ்கேலா விற்பனைக்கு வந்துள்ளது. சன்னியின் பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் கார் ரூ.5.93 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஆனால், ஸ்கேலாவின் பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.6.99 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|