பதிவு செய்த நாள்
07 செப்2012
23:40

சென்னை: பண்டிகை காலத்தைமுன்னிட்டு, கார்பரேஷன் பேங்க், சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்களுக்கு, 50 லட்சம் வரையில், 30 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தக் கூடிய வீட்டு வசதிக் கடன்களுக்கு, 10.50 சதவீத வட்டியும், 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட கடன்களுக்கான வட்டி முறையே, 10.75 மற்றும் 11 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐந்து மற்றும் ஏழு ஆண்டுகளுக்கான வாகன கடனுக்கான வட்டி, முறையே 11.25 சதவீதம் மற்றும் 11.75 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வீட்டு வசதிக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு இணைப்பு திட்டமாக வாகன கடனும், மேலும் இதற்கு, 0.25 சதவீத வட்டிச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கடன்களுக்கான பரிசீலனை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என, இவ்வங்கியின் பொது மேலாளர் ச.பட்டாபிராமன் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|