பதிவு செய்த நாள்
07 செப்2012
23:41

புதுடில்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வருவாய் இழப்புஇது குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:பெட்ரோல் உட்பட, பல்வேறு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உடனடியாக, உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு (விலையை உயர்த்தாவிட்டால்) வருவாய் இழப்பு ஏற்படும். இதை குறைக்க, சில கடுமையான, வருத்தம் தரக் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும். பெட்ரோலியத் துறை சந்தித்து வரும் பிரச்னை குறித்து, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு எப்போது கூடி முடிவெடுக்கும் என்று தெரியாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.இக்குழுவிடம், ஒரு குடும்பத்திற்கு, ஓராண்டில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை, 46 என்ற அளவில் நிர்ணயிக்குமாறு பெட்ரோலிய அமைச்சகம், தெரிவித்துஉள்ளது. மேலும், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்கு, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை தவிர்க்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அடுத்த வாரம் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவு எடுக்கும் என, தெரிகிறது.உற்பத்தி செலவுடீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படவில்லை. ஆனால், இவற்றின் உற்பத்திச் செலவு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தவகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாளொன்றுக்கு, 560 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|