பதிவு செய்த நாள்
07 செப்2012
23:41

பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலை உயர்வால், பால் விலையை உயர்த்த ஒரு சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.நாட்டின் பல மாநிலங்களில் காணப்படும் வறட்சியால், தவிடு, புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு போன்றவற்றின் விலை, கடந்த சில மாதங்களில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால், குறிப்பாக, பால் மற்றும் பால்பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் கால்நடை தீவனச் செலவு அதிகரித்துள்ளது.புண்ணாக்கு விலைகடந்த ஆண்டு ஜூலையில், 2,100 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு குவிண்டால் சோயா புண்ணாக்கு விலை, நடப்பாண்டு ஜூலையில் 100 சதவீதம் உயர்ந்து, 4,200 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், ஒரு கிலோ பால் கொள்முதல் விலை, சராசரியாக 2.5 சதவீதம் உயர்ந்து, 395 ரூபாயில் இருந்து, 405 என்ற அளவிற்கே அதிகரித்துள்ளது.சென்ற ஆண்டு, பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பால் விலையை, லிட்டருக்கு 56 ரூபாய் வரை உயர்த்தின. இதனால் ஊக்கமடைந்த விவசாயிகள், ஆர்வத்துடன் பால் உற்பத்தியை மேற்கொண்டனர். இதன் விளைவாக, ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிலும், பால் கொள்முதல் 1525 சதவீதம் வரை உயர்ந்தது.இருந்தபோதிலும், கால்நடை தீவனச் செலவுகள் அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 34 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று, விவசாயிகள் கோரி வருகின்றனர் என, பால் பண்ணையாளர் முன்னேற்ற பேரவை தலைவர் தல்ஜித் சிங் சதர்புரா தெரிவித்தார்.பால் கொள்முதல் அதிகரித்துள்ள நிலையில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் உற்பத்தியும் அதிகரித்தது. இதையடுத்து, சென்ற ஜூன் மாதம், பால் பவுடர் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது.இதனால், பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி துறையை சேர்ந்த நிறுவனங்கள், உற்சாகத்துடன் பால் பவுடர் ஏற்றுமதியை மேற்கொண்டன.பால் பவுடர்ஆனால், சர்வதேச சந்தையில் பால் பவுடர் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், பல நிறுவனங்கள், அதன் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. இந்த வகையில், நாட்டில் தற்போது 1.50 லட்சம் டன் பால் பவுடர் தேக்கமடைந்துள்ளதாக பஞ்சாப் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பை (மில்க்பெட்) சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்."தற்போது, சர்வதேச சந்தையில் ஒரு கிலோ பால் பவுடர் 2.7 டாலர் (135140 ரூபாய்) என்ற அளவிற்கு விலை போகிறது. இதனுடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோ பால்பவுடரின் அடக்க விலை 160170 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அதனால், பால் பவுடர் ஏற்றுமதியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் உள்ளோம்' என, அவர் மேலும் தெரிவித்தார்.இந்நிலையில், சென்ற மாதம், மில்க்பெட் நிறுவனம், அதன் "வெர்கா' பால் விலையை, லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தியது. இந்நிறுவனம், நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறது.இதே போன்று, தலைநகர் பிராந்தியத்தை சேர்ந்த மதர்டெய்ரி நிறுவனம், பால் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இந் நிறுவனம், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.பாதிப்புகர்நாடகாவை சேர்ந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், சென்ற ஜனவரியில், பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தின. எனினும், தற்போது பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என, கர்நாடகா பால் கூட்டமைப்பை சேர்ந்த உயரதிகாரி தெரிவித்தார். அதே சமயம், ஒரு சில தனியார் நிறுவனங்கள், விரைவில் பால் விலையை உயர்த்த உள்ளதால், நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என, இத்துறைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|