பதிவு செய்த நாள்
07 செப்2012
23:42

மும்பை: நாட்டின், பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. நிதி நெருக்கடியில் சிக்குண்டுள்ள, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடன் பிரச்னைக்கு தீர்வு காணவும், பொருளாதார சீரமைப்பு திட்டங்களை மேற்கொள்ளவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ஐரோப்பிய மத்திய வங்கி, கடன் பத்திர வெளியீட்டின் மூலம், நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐரோப்பிய நாடுகள், நிதி திரட்டி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில், பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், நேற்று மட்டும் 337.46 புள்ளிகள் உயர்ந்து, 17,683.73 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,701.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,575.79 புள்ளிகள் வரையிலும் சென்றது.நீண்ட நாளைக்கு பிறகு,"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி', 103.70 புள்ளிகள் அதிகரித்து, 5,342.10 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,347.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,309.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|