பதிவு செய்த நாள்
09 செப்2012
00:45

மும்பை:நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி, கிட்டத்தட்ட பூஜ்ய நிலைக்கு சென்று விட்டதால், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்கத் தவறும்பட்சத்தில், நிலைமை படுமோசமாகி விடும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) தலைவர் ஆதி கோத்ரெஜ் எச்சரித்துஉள்ளார்.
சீர்திருத்த நடவடிக்கைகள்:மும்பையில், செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது:நாட்டின் தொழில் வளர்ச்சி, மந்தகதியில் இருந்து, கிட்டத்தட்ட பூஜ்ய நிலைக்கு வந்து விட்டது. இந்த வளர்ச்சி விகிதம், மிகவும் கவலை அளிக்கிறது. பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம், மீண்டும் வளர்ச்சி நிலையை எட்ட வேண்டும். அரசு, இது குறித்து, முடிவு எடுத்து செயல்பட வேண்டிய தருணம் இது.
நமது பொருளாதாரம், இத்தகைய சூழலை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு, அடிப்படை பிரச்னைகளை கொண்டதல்ல. அதனால், புதிய கொள்கை முடிவுகள் மூலம், பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, சுலபமாக எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை காணலாம்.மத்திய, மாநில அரசுகள், சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். அன்னிய முதலீடுகளை பாதிக்கக்கூடிய ("ஜி.ஏ.ஏ.ஆர்' விதிமுறை, வருமான வரி) திட்டங்களை சரி செய்யவேண்டும். ஏற்கனவே, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
÷ஷாம் குழுவின் அறிக்கை விரைவில் அமல்படுத்தப்படும் என, நம்புகிறோம்.நாட்டின் வளர்ச்சிக்கு, மிகப் பெரிய தடையாக, கவலை அளிப்பதாக, நிதிப் பற்றாக்குறை உள்ளது. மத்திய அரசு, எரிபொருள் மானியச் செலவுகளை குறைத்து, பொதுத் துறை நிறுவனப் பங்கு விற்பனை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.அன்னிய முதலீடு:அன்னிய முதலீடு இல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. பன்முக பிராண்டு சில்லறை விற்பனை, விமானம் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அமலானால், மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படும். மாநில அளவில் இருந்து, இச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.இந்திய தொழில் துறையின் மந்தமான வளர்ச்சிக்கு, வங்கிகளின் வட்டி உயர்வும் காரணமாகும். முதலீடுகள் அதிகரிக்க, வங்கிகள் வைத்துள்ள ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.,) மற்றும் வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டி விகிதங்களை, தலா 1 சதவீதம் குறைக்க வேண்டும் இவ்வாறு கோத்ரெஜ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|