பதிவு செய்த நாள்
10 செப்2012
00:20

புதுடில்லி:நாட்டில் தொலைபேசி, அலைபேசி சேவைகளை உள்ளடக்கிய, ஒட்டுமொத்த தொலைதொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை, சென்ற ஜூலை மாதம், 94.48 கோடியாக சரிவடைந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், 96.55 கோடியாக இருந்தது.ரிலையன்ஸ்:தொலைதொடர்பு சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சென்ற ஜூலை மாதம், முதன் முறையாக, 2.07 கோடி குறைந்துள்ளது. இதில், அலைபேசி சந்தாதாரரின் எண்ணிக்கை 2.06 கோடி என்ற அளவில் உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், மிகவும் அதிக அளவில், அதாவது 2.04 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 60 நாட்களாக தொடர்ந்து தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தாமல் உள்ளவர்களை நீக்கியதே, எண்ணிக்கை குறைய காரணம் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்ற ஜூலை மாதம், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 13.40 கோடியாக குறைந்துஉள்ளது. இது, ஜூன் மாதம் 15.40 கோடியாக இருந்தது.
இதே காலத்தில் டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் :24 லட்சம் அலைபேசி சந்தாதாரர்களை இழந்துள்ளது. அடுத்த இடங்களில் யூனினார் (10 லட்சம்), வீடியோகோன் (4.10 லட்சம்), லூப் மொபைல் (1.50 லட்சம்), எம்.டி. என்.எல்., (1.50 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.பார்தி ஏர்டெல்:அதே சமயம், இதே காலத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 15 லட்சம் அதிகரித்து, 18.8 கோடியாக உயர்ந்து உள்ளது.
வோடோபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 12 லட்சம் அதிகரித்து 15.40 கோடியாக உயர்ந்து உள்ளது. இதே காலத்தில், ஐடியா செலுலார் (4.5 லட்சம்), ஏர்செல் (2.80 லட்சம்), சிஸ்டெமா ஷியாம் (1.60 லட்சம்), பீ.எஸ்.என்.எல்., (4.70 லட்சம்) ஆகிய நிறுவனங்கள், புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|