பதிவு செய்த நாள்
10 செப்2012
00:21

சேலம்:வடமாநிலங்களில், பருப்பு அறுவடை துவங்கியுள்ளதால், தமிழகத்துக்கு துவரை, உளுந்து, துவரம் பருப்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அவற்றின் விலை குறைந்து உள்ளது.விளைச்சல்:கடந்த ஆண்டு பருப்பு விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. இதனால் ஊக்கமடைந்த, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் பருப்பு வகைகளை பயிரிட்டனர். இதன் காரணமாக, நடப்பாண்டு பருப்பு வகைகளின் விளைச்சல், 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பயறு, அறுவடை துவங்கியுள்ளது. இத்துடன், பண்டிகை காலமும் துவங்கி உள்ளதால், வடமாநில வியாபாரிகள், தாங்கள் இருப்பு வைத்திருந்த துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை மிக வேகமாக விற்பனை செய்து வருகின்றனர்.இதனால், தமிழகத்துக்கு, பருப்பு வகைகளின் வரத்து அதிகரித்து, அதன் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், 7,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு குவிண்டால் உளுத்தம் பருப்பு, தற்போது, 200 ரூபாய் குறைந்து, 7,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழக ஆலைகள்:அது போன்று ஒரு குவிண்டால் முதல் ரக துவரம் பருப்பு விலை, 8,400லிருந்து 8,200 ரூபாயாக குறைந்துஉள்ளது. இரண்டாம் ரகம்
8,050லிருந்து 7,800 ரூபாயாகவும், மூன்றாம் ரகம் 7,700லிருந்து 7,500 ரூபாயாகவும் சரிந்துள்ளது.வடமாநிலங்களில் இருந்து, குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழக ஆலைகளுக்கு, மிக அதிக அளவில் பருப்பு வகைகள் விற்பனைக்கு வருகின்றன. இது, மேலும் அதிகரிக்கும் என்ற தகவலால், பருப்பு வகைகளை இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் மத்தியில், கிலி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா:செவ்வாய்ப்பேட்டை பருப்பு வியாபாரி சக்கரவர்த்தி கூறியதாவது:தமிழகத்துக்கு தேவையான பருப்பு வகைகள், கர்நாடகாவின், தாவன்கரே, மகாராஷ்டிராவின், குல்பர்கா ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நடப்பாண்டு, வடமாநிலங்கள் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் பருப்பு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், வரும் நாட்களில் பருப்பு விலை மேலும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|