பதிவு செய்த நாள்
10 செப்2012
00:23

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 70,548 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2011-12ம் நிதியாண்டின், இதே காலத்தை (64,012 கோடி ரூபாய்) விட, 10.73 சதவீதம் அதிகமாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூலையில் மட்டும், இதன் ஏற்றுமதி, 16,080 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், 14,692 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, ஜூலை மாதத்தில் மட்டும், இவற்றின் ஏற்றுமதி, 9.49 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாலர் மதிப்பு:ரூபாய் மதிப்பில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றாலும், டாலர் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2011ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு 2012ம் ஆண்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மிகவும் சரிவடைந்துள்ளது.எடுத்துக்காட்டாக, கடந்த 2011ம் ஆண்டு, ஜூலை மாதத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பு, 44.42 ரூபாயாக இருந்தது.
இது, நடப்பாண்டு ஜூலை மாதத்தில், 55.49 ரூபாயாக மிகவும் சரிவடைந்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 331.75 கோடி டாலராக இருந்தது. இது, நடப்பாண்டு ஜூலை மாதத்தில், 289.88 கோடி டாலராக குறைந்துள்ளது. ஆக, டாலர் மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, ஜூலை மாதத்தில், 12.36 சதவீதம் குறைந்துஉள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், இவற்றின் ஏற்றுமதி, 9.54 சதவீதம் சரிவடைந்து, 1,427 கோடி டாலரிலிருந்து, 1,291 கோடி டாலராக குறைந்துள்ளது.
வைர ஏற்றுமதி:நடப்பு நிதியாண்டின், ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 26,439 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 37,489 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, கணக்கீட்டு காலத்தில், இதன் ஏற்றுமதி, 29.48 சதவீதம் குறைந்துள்ளது.ஜூலை மாதத்தில் மட்டும், இதன் ஏற்றுமதி, 33.62 சதவீதம் குறைந்து, 8,344 கோடி ரூபாயிலிருந்து, 5,538 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 199 லட்சம் காரட் என்ற அளவிலிருந்து, 96 லட்சம் காரட் என்ற அளவில் குறைந்துள்ளது.
தங்க ஆபரணங்கள்:நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 153 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,231 கோடி ரூபாயிலிருந்து, 30,883 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. ஜூலை மாதங்களில், இதன் ஏற்றுமதி, 144 சதவீதம் வளர்ச்சியடைந்து, 3,296 கோடி ரூபாயிலிருந்து, 8,041 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்க டாலர்கள் மற்றும் காசுகள் ஏற்றுமதி, முதல் நான்கு மாத காலத்தில், 9.99 சதவீதம் குறைந்து, 10,179 கோடி ரூபாயிலிருந்து, 9,162 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. கணக்கீட்டு காலத்தில், நவரத்தினங்கள் ஏற்றுமதி, 16.83 சதவீதம் வளர்ச்சிகண்டு, 409 கோடி ரூபாயிலிருந்து, 478 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 26.74 சதவீதம் உயர்ந்து, 821 கோடி ரூபாயிலிருந்து, 1,040 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முத்துக்கள்:முத்துக்கள் ஏற்றுமதி, 3.25 கோடி ரூபாயிலிருந்து, 15.50 கோடி ரூபாயாகவும், செயற்கை கற்கள் ஏற்றுமதி, 44 கோடி ரூபாயிலிருந்து, 104 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில், கச்சா வைர ஏற்றுமதி, 4.71 சதவீதம் சரிவடைந்து, 2,440 கோடி ரூபாயிலிருந்து, 2,320 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
சென்ற ஜூலை மாதத்தில் மட்டும், இதன் ஏற்றுமதி, 28.39 சதவீதம் சரிவடைந்து, 640 கோடி ரூபாயிலிருந்து, 82 கோடி ரூபாயாக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், இதர ஆபரணங்கள் ஏற்றுமதி, 97 கோடி ரூபாயிலிருந்து, 101 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, இக்கூட்டமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|