ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு ... பருவமழை குறித்த மதிப்பீடு மாறியதால்...வேளாண் முன்பேர சந்தைகளில் சுணக்க நிலை பருவமழை குறித்த மதிப்பீடு மாறியதால்...வேளாண் முன்பேர சந்தைகளில் சுணக்க ... ...
இயற்கை ரப்பர் பயன்பாடு 4.20 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2012
00:32

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் பயன்பாடு, 4.9 சதவீதம் அதிகரித்து, 4.20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3.14 லட்சம் டன்னாக இருந்தது என, ரப்பர் வாரியத்தின் தலைவர் ஷீலா தாமஸ் தெரிவித்தார்.
மதிப்பீட்டு காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 0.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.13 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தி:நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் பயன்பாடு, முறையே 9.30 லட்சம் டன் மற்றும் 10.06 லட்சம் டன்னாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான பற்றாக்குறை, 76 ஆயிரம் டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில், ரப்பர் கையிருப்பு 2.36 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு சந்தையில் இதற்கான பற்றாக்குறை ஏற்படவில்லை.
மேலும், ரப்பர் பயன்பாட்டு நிறுவனங்கள், வரிச் சலுகை திட்டங்கள் வாயிலாக, 1.50 லட்சம் டன் இயற்கை ரப்பரை இறக்குமதி செய்து கொண்டுள்ளன.சென்ற 2011ம் ஆண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி 1.10 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், இதன் பயன்பாடு 1.09 கோடி டன் என்ற அளவில் இருந்தது என, சர்வதேச ரப்பர் ஆய்வு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2012ம் ஆண்டின், முதல் ஆறு மாத காலத்தில், உலக நாடுகளின் இயற்கை ரப்பர் உற்பத்தி 4.3 சதவீதம் வளர்ச்சி காணும் எனவும், அதேசமயம் இதன் பயன்பாடு 0.7 சதவீதம் குறையும் எனவும், மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச நாடுகளின் ரப்பர் உற்பத்தி மற்றும் பயன்பாடு முறையே 1.13 கோடி டன் மற்றும் 1.12 கோடி என்ற அளவில் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டில், 10 லட்சம் டன் ரப்பர் உபரியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
உபரி ரப்பர்:இதேபோன்று, வரும் 2013ம் ஆண்டிலும், இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் பயன்பாடு முறையே 1.18 கோடி டன் மற்றும் 1.17 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, உபரியாக உள்ள இயற்கை ரப்பரின் அளவு 1.51 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி 9.04 லட்சம் டன்னாகவும், பயன்பாடு 9.65 லட்சம் டன்னாகவும் இருந்தது. குறிப்பாக, டயர் தயாரிப்பு நிறுவனங்களின் ரப்பர் பயன்பாடு 5.7 சதவீதம் அதிகரித்தும், இதர துறைகளில் இதன் பயன்பாடு 4.9 சதவீதம் சரிவடைந்தும் இருந்தது என, ஷீலா தாமஸ் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)